Aran Sei

திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்று கைதான நாடாளுமன்ற உறுப்பினர் – காவல் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – நல்லூரில் உள்ள திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு முயன்ற நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்தில் கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கு முயன்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அசாம் மக்கள் மீதான காவல்துறையின் துப்பாக்கி சூடு: நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க கபில் சிபல் கோரிக்கை

நினைவிடத்திற்கு அருகே கற்பூரம் ஏற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலர் முயன்ற போது காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்திருந்தனர்.

எனினும், காவல்துறையினரின் தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

கண்ணகி-முருகேசன் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டால் வழக்கறிஞர் பொ.ரத்தினத்தை அரசு நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் கோரிக்கை

இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறை செய்திதொடர்பாளர் நிஹால் தல்தூவ , தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரும்  காவல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்