விவசாயிகள் நலனுக்காக அவர்களின் போராட்டத்துக்கு சுமூகமான முடிவை பாஜக எடுக்கும்பட்சத்தில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் நாங்கள் தயார் என்று பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவருமான அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அம்ரீந்தர் சிங்கின் ஊகட ஆலோசகரான ரவீ்ண் தக்ருல் தனது டிவிட்டர் பக்கத்தில், அமரிந்தர் சிங் கூறியதாக பதிவிட்டுள்ளார். அதில், “பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. பஞ்சாப்புக்கும், மாநில மக்களுக்கும் சேவை செய்யவும், கடந்த ஓர் ஆண்டாக போராடிவரும் விவசாயிகள் நலனுக்காகவும் விரைவில் நான்(அமரிந்தர்சிங்) புதிய கட்சியைத் தொடங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘Hopeful of a seat arrangement with @BJP4India in 2022 Punjab Assembly polls if #FarmersProtest is resolved in farmers’ interest. Also looking at alliance with like-minded parties such as breakaway Akali groups, particularly Dhindsa &
Brahmpura factions’: @capt_amarinder 2/3 https://t.co/rkYhk4aE9Y— Raveen Thukral (@RT_Media_Capt) October 19, 2021
“எங்களுடைய சிந்தனைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் ஒத்துவரக்கூடிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம். சிரோன்மணி அகாலி தளமும் எங்களுடன் கூட்டணியில் சேரலாம். என்னுடைய மாநிலத்துக்கும், என் மாநில மக்களுக்கும் நல்ல பாதுகாப்பான எதிர்காலம் அமையும்வரை ஓயமாட்டேன்” என்று அமரிந்தர் சிங் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
“ஒருவேளை, விவசாயிகள் நலனுக்காக அவர்களின் போராட்டத்துக்கு சுமூகமான முடிவை பாஜக எடுக்கும்பட்சத்தில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் நாங்கள் தயார். பஞ்சாப் மாநிலத்துக்கு அரசியல் நிலைத்தன்மை தேவை” என்று கூறியுள்ளார்.
வெளியிலிருந்தும், மாநிலத்துக்கு உள்ளேயிருந்தும் வரும் அச்சுறுத்தல்களில் இருந்து மக்களுக்கு பாதுகாப்புத் தேவை என்றும் மாநிலத்தில் அமைதியும், பாதுகாப்பும் நிலைத்திருக்க தேவையானவற்றை செய்வேன் என எனது மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றும் அமரிந்தர் சிங் கூறியதாக ரவீ்ண் தக்ருல் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.