Aran Sei

உமர் காலித்துக்கு கொரோனா தொற்று உறுதி : சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் உமர் காலித்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்றஆண்டு பிப்ரவரி மாதம், வடகிழக்கு டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் எதிர்த்து மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது. அமைதியான முறையில் நடந்த இந்தப் போராட்டத்தை கலைப்பதற்காக நடத்தப்பட்ட வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் முஸ்லீம்கள். பல முஸ்லீம் வீடுகளும், கடைகளும் வழிபாட்டு தலங்களும் தாக்கப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன.

டெல்லி கலவர வழக்கில் உமர் காலித்துக்கு பிணை – ஆரோக்கிய சேது செயலியை நிறுவும்படி நீதிமன்றம் உத்தரவு

இந்தக் கலவரங்களுக்குப் பின்னர், ‘சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதாகவும்’, ‘இந்த வன்முறைச் சம்பவங்களுக்குத்  திட்டம் தீட்டியதாகவும்’ உமர் காலித் மீதும் ஜேஎன்யூவின் முனைவர் பட்ட மாணவர் ஷர்ஜீல் இமாம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ஷர்ஜீல் இமாமும், செப்டம்பர் மாதம் 13-ம் தேதி உமர் காலித்தும் கைது செய்யப்பட்டனர். இருவரும் டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

இந்நிலையில், உமர் காலித்துக்கு எடுக்கப்பட்ட கொரோனா தொற்று சோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய மூத்த சிறை அதிகாரி ஒருவர், 33 வயதான உமர் காலித்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து, அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது என்றும் நேற்று முன்தினம் (ஏப்ரல் 24), வந்த சோதனை முடிவில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் சிறை வளாகத்திற்கு உள்ளேயே  தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்