Aran Sei

‘தவறான அரசியலும் தவறான ஆட்சியும்தான் மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணம்’ – இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கருத்து

ற்கொலை செய்துக்கொண்ட டெல்லி மருத்துவரின் மரணத்திற்கு, அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத இந்த அமைப்பு ஏற்படுத்திய மன உலைச்சல்தான் காரணம் என்று இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர் ரவி வான்கேத்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் ரவி வான்கேத்கர், “மருத்துவர் விவேக் ராய். டெல்லியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார். கடந்த ஒரு மாதமாக, கொரோனா நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். ஏழு, எட்டு நோயாளிகளுக்குத் தினமும் மருத்துவம் பார்த்திருக்கிறார். ஆனால், அதில் பலர் உயிரிழந்து போகிறார்கள். இந்தத் துயர்மிக நிகழ்வுகளால் உடைந்து போய் தனது முடிவைத் தேடியுள்ளார். கண் முன்னே மடியும் மக்களைக் காணவியலாது, தன்னை மரித்துக்கொண்டுள்ளார்.” என்று  தெரிவித்துள்ளார்.

“உத்தரபிரதேசம் கோரக்பூரை சேர்ந்த விவேக் மிகவும் புத்திசாலியான மருத்துவர். இந்த கொரோனா பெருந்தொற்று  காலத்தில், நூற்றுக்காணக்கனோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அவரின் மனைவி இரண்டு மாத கர்பணியாக உள்ளார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் கணக்கிடாமல் விடப்பட்ட 1150 கொரோனா இறப்புகள் : சுடுகாடுகளில் என்டிடிவி நடத்திய ஆய்வு

இறுதியாக, “அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத இந்தக் கட்டமைப்பு ஏற்படுத்திய மன உலைச்சல்தான், இந்த இளம் மருத்துவரின் மரணத்திற்கு காரணம்.  தவறான அறிவியல். தவறான அரசியல். தவறான ஆட்சி.” என்று  ரவி வான்கேத்கர் விமர்சித்துள்ளார்.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), டெல்லி மல்வியா நகரில் உள்ள தனது வீட்டில் மருத்துவர் விவேக் ராய் தற்கொலை செய்துக்கொண்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்