Aran Sei

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் – கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் கருத்து

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஆளுநர் மதித்து நடக்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் கொண்டு வரும் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேரள முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சதாசிவம் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 1), உதகமண்டலத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ள சதாசிவம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தண்ணீர் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. ஆகவே, அதனை உணர்ந்து மாநிலங்கள் தங்களுக்கு இடையே நிலவும் தண்ணீர் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று சதாசிவம் கூறியுள்ளார்.

‘நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன்’ -முதல்வர் ஸ்டாலினிடம் உறுதியளித்த ஆளுநர்

“நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். ஆனால் அதே சமயம் மாணவர்களும் நுழைவுத்தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேரள முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சதாசிவம் தெரிவித்துள்ளார்.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்