மறைந்த கோவா முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான மனோகர் பாரிக்கரின் மகனான உத்பல் பாரிக்கர், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து, பனாஜி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக நேற்று (ஜனவரி 21) அறிவித்தார்.
பாஜகவில் படிப்படியாக அழிந்து வரும் மதிப்புகளுக்கு எதிராக நிற்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக பனாஜியில் செய்தியாளர்களிடம் சந்தித்த உத்பல் பாரிக்கர் கூறியுள்ளார்.
“இத்தனை வருடங்களாக நானும் எனது தந்தையும் பனாஜி மக்களுடன் அபரிமிதமான பிணைப்பைப் பெற்றுள்ளோம். ஆனால் பனாஜி தொகுதிக்கான சீட்டை எனக்குத் தராமல் காங்கிரஸிலிருந்து பாஜகவிற்கு சந்தர்ப்பவாதமாக நுழைந்த தற்போதைய பனாஜி சட்டமன்ற உறுப்பினரான அடனாசியோ பாபுஷ் மான்செரேட்டுக்கு கொடுத்துள்ளனர்” என்று உத்பல் பாரிக்கர் பேசியுள்ளார்.
அனைத்து மதங்களும் அமைதியாக வாழும் இந்தியாவைத்தான் நேதாஜி கனவு கண்டார் – நேதாஜி மகள் கருத்து
சிவசேனா மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் உத்பல் பாரிக்கருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. தற்போதைய பாஜக தலைமை மனோகர் பாரிக்கரின் குடும்பத்தை “அவமரியாதை” செய்கிறது, ஆகவே அதனால் உத்பால் பாரிக்கரை ஆதரிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் சிவசேனாவின் சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்துள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.