Aran Sei

கொரோனா காலத்தில் நாடாளுமன்ற கட்டிடம் தேவையா? – முன்னாள் அரசு அதிகாரிகள் கேள்வி

Image Credits: DNA India

த்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய முன்னாள் அரசு அதிகாரிகள், நரேந்திர மோடி அரசாங்கத்தின் ‘நாடாளுமன்ற புதிய கட்டிடம்’ கட்டுவதற்கான திட்டத்தைக் கடுமையாகச் சாடியுள்ளனர். கொரோனா தொற்று பலரது வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் பேரழிவை ஏற்படுத்திவரும் நேரத்தில், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இத்தனை ஆடம்பரம் ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘அரசியலமைப்பு நடத்தை குழு’ என்ற அமைப்பின் பெயரில், 69 முன்னாள் அதிகாரிகள் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும் விதம் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணிக்கும் வகையில் உள்ளது என்றும் இது ‘நிர்வாக மேலாதிக்கத்தை’ காட்டும் வகையில் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

புதிய நாடாளுமன்றமும், ஆளும் வர்க்கத்தின் அரசியல் கர்வமும் – நீரா சந்தோக்

“வடிவமைப்பாளர்களை அழைப்பது, ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பது, பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை நடத்துதல், நகர்ப்புற வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளை பெறுதல் ஆகிய அனைத்திலும், நடைமுறைகளும் விதிகளும் மீறப்பட்டுள்ளன. விதிகளை மீறி, முன்னரே தீர்மானிக்கப்பட்ட செயல் திட்டம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் கட்டுமானம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை கட்டுமானத்தைத் தொடங்க கூடாது என்று டிசம்பர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், “இந்த விவகாரத்தில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், பிரதமர் எவ்வாறு  புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட முடியும்” என்று கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணியைத் தொடங்க கூடாது – உச்ச நீதிமன்றம்

பிரதமர் நிர்வாகத்தின் தலைவர் தான், அவர் நாடாளுமன்றத்தின் தலைவர் அல்ல என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அவர் எவ்வாறு அடிக்கல் நாட்டினார் என்று ஆச்சர்யம் அடைந்ததாக ‘அரசியலமைப்பு நடத்தை குழு’ தெரிவித்துள்ளது. இது, பிரதமரின் ‘அரசியலமைப்பு முறையற்ற தன்மையை’ காட்டுகிறது எனவும் முன்னாள் அதிகாரிகள் அடங்கு அந்த குழு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்