Aran Sei

‘‘2ஜி வழக்கில் மானநஷ்ட வழக்குப் பதிந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி – மன்னிப்பு கோரிய முன்னாள் சிஏஜி அதிகாரி

2ஜி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிருபமின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக, அவரிடம் இந்தியாவின் முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) வினோத் ராய் மன்னிப்பு கோரியுள்ளார்.

டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில், சஞ்சய் நிருபம் தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கிற்கு பதிலளித்துள்ள வினோத் ராய், இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வினோத் ராய் தாக்கல் செய்திருக்கும் பதிலில், “2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் வெளியான எனது நேர்காணல்களில் 2ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் இருந்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை விலக்கி வைக்குமாறு காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிருபம் அழுத்த அளித்ததாக தெரிவித்திருந்தேன். நான் சஞ்சய் நிருபம் குறித்து தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் தவறானது.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நேர்காணல்களால் சஞ்சய் நிருபமிற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வருத்த தெரிவித்துள்ள வினோத் ராய், இந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, இந்த வழக்கை முடித்துக் கொள்ளுமாறு அந்த பதிலில் கோரியுள்ளார்.

Source : Bar and Bench

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்