Aran Sei

பாஜக நடத்திய பந்த்தில் வன்முறை – முன்னாள் அமைச்சர்கள் உட்பட 13 பாஜக தலைவர்கள் கைது

காராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக நடத்திய பந்த் போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் தொடர்பிருப்பதாக கூறி, பாஜக முன்னாள் அமைச்சர்கள் இருவர் மற்றும் அமராவதி மாவட்ட மேயர் உட்பட அக்கட்சியின் 13 தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம்(நவம்பர் 14), மாலை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் அனில் பாண்டேவும் பிரவின் போட்டும் மற்றும் மேயர் சேத்தன் கவாண்டே ஆகியோர் நேற்று(நவம்பர் 15) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமராவதி காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் அமராவதி நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.

‘நேரு பிறந்தநாளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தின நாளை மாற்றுங்கள்’- பஞ்சாப் பாஜக தலைவர் பிரதமருக்கு கடிதம்

பாஜக தலைவர்களும் தொண்டர்களும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகளை குறிவைத்து தாக்கி, சேதப்படுத்தியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக திரிபுரா வன்முறைக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மகாராஷ்ட்ரா வன்முறை தொடர்பாக பேசியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், நடைபெறவுள்ள உத்தரபிரதேச தேர்தலை குறிவைத்தே இந்த வன்முறை சம்பவங்கள் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் – குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்

மகாராஷ்ட்ர மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக், பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலாரி இஸ்லாமிய அமைப்பான ராஸா அகாடமியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இந்த வன்முறையின் பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்