Aran Sei

பெகாசிஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் செயற்பாட்டாளர்கள் – ஆதாரங்கள் அம்பலம்

ம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் குறிப்பிடத்தகுந்த மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் பெகாசிஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அம்மாநிலத்தைச் சார்ந்த அரசியல் தலைவர் பிலால் லோன் மற்றும் டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் மறைந்த எஸ்.ஏ.ஆர்.கிலானி ஆகிய இரண்டு பேரின் தொலைபேசிகள் கண்காணிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பியோருக்கு கட்டாயமாக தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு இல்லை – நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கும் ஒன்றிய அரசு

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள பிலால் லோன்,”தொலைபேசி கண்காணிக்கப்பட்டது குறித்து நான் வதந்தியைக் கேள்விப்பட்டேன். நானும் ஒரு இலக்காக இருக்கலாம். ஆனால் நான் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாத ஒரு நபர்” என்று கூறியுள்ளதாக தி வயர் செய்தியில் வெளியிட்டுள்ளது.

இதேபோன்று,கிலானி தொலைபேசியும் கடந்த பிப்ரவரி 2018 மற்றும் ஜனவரி 2019 ஆம் ஆண்டு கண்காணிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசை விரட்டும் ‘பெகாசிஸ்’ என்னும் பிசாசு – அ.மார்க்ஸ்

மேலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், மாநில முதலமைச்சருமான மெஹபூபா முப்தியின் குடும்பத்தைச் சார்ந்த இருவரின் தொலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, அம்மாநிலத்தின் அப்னி கட்சியின் தலைவர் அல்தாப் புகாரியின் சகோதரர் தாரிக் புகாரியின் தொலைபேசி கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி மற்றும் அவரது மருமகன், பத்திரிகையாளர் இப்திகார் கிலானி மற்றும் அவரது மகன், விஞ்ஞானி சையத் நசீம் கீலானி ஆகியோரின் தொலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் – காவல்துறையினர் குவிப்பு

மேலும், ஹரியட் கான்பிரான்ஸ் மிர்வேய்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவர் உமர் பாரூக் அவரது ஓட்டுநர் ஆகியோரின் தொலைபேசி கடந்த 2017 முதல் 2019 வரை கண்காணிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிலானி, பரூக் ஆகிய இருவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதில் இருந்து, கடந்த ஆகஸ்ட் 5,2019 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

வேவு பார்க்கப்பட்டவர்களில் அனில் அம்பானியும் ஒருவர் – ரபேல் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர்களும் பட்டியலில் அடக்கம்

இதேபோன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளர் வாகுவர் பாட்டியின் தொலைபேசியும் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது செயல்பாட்டின் காரணமாக அவரது தொலைபேசி கண்காணிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும் தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்தபட்சம் ஐந்து பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் முசாமில் ஜலீல், இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் அவுரங்கசீப் நக்ஷ்பாண்டி, டி.என்.ஏ பத்திரிகையின் இப்திகார் கிலானி மற்றும் பி.டி.ஐ.யின் பத்திரிகையாளர் சுமிர் கவுல் உள்ளிட்ட நான்கு பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டுள்னர். ஐந்தாவது பத்திரிகையாளரின் பெயர் அந்தப் பத்திரிகையாளரின் வேண்டுகோளை அடுத்து வெளியிடப்படவில்லை என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

இதே போன்று,டெல்லியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ஷபீர் உசேன் என்பவரும் இந்தப் பட்டியலில் உள்ளதாக தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்