Aran Sei

போலி காரணங்களைக் கூறி ஓஷோ ஆசிரம நிலங்களை விற்கும் வெளிநாட்டவர்கள்- ஓஷோ நண்பர்கள் அமைப்பு புகார்

மும்பை மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் ஓஷோ பன்னாட்டு தியான மையத்தின் நிலங்கள் விற்கப்பட இருப்பதாகவும் அதற்கு ஓஷோ நண்பர்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுகாலத்தில் ஏற்பட்ட நிதி சுமையின் காரணமாகக் கோரேகான் பூங்காவில் உள்ள அதன் இரண்டு நிலங்களை 107 கோடிக்கு விற்க முடிவு செய்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பக்தர்கள் கையில் கோவில்’ என்பது ஜக்கியின் கருத்தல்ல, பாஜக கருத்து – கொளத்தூர் மணி

மும்பையில் செயல்படும் இந்த மையம் உலகளவில் உள்ள தியான மையங்களிலேயே மிகவும் சொகுசானது எனவும், இது ஓஷோ தியான மையத்தின் உலக தலைமையிடம் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறியுள்ளது.

இந்த இரண்டு நிலங்களும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜிவ் பஜாஜ் யிற்கு விற்கப்பட இருப்பதாகவும், அவர் அந்த இரண்டு நிலங்களுக்கு அருகாமையில் வசித்து வருகின்றார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா?: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்

இந்நிலையில் இந்த நிலங்கள் விற்கப்பட இருப்பதற்கு ஓஷோ நண்பர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், ஓஷோ பன்னாட்டு அமைப்பின் ஆணையர் இதற்கு அனுமதி அளித்திருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிரமத்தின் இந்த நிலங்களை விற்பதற்கு அனுமதி கேட்டு ஓஷோ பன்னாட்டு அமைப்பின் ஆணையரிடம் ஓஷோ தியான மையம் விண்ணப்பித்திருந்த அந்த மனுவில், கொரனோ தொற்று காலத்தில் உலகம் முழுவதும் பாதிப்படைந்திருக்கும் நிலையில் ஓஷோ தியான மையமும் பெரும் நிதி சுமையில் உள்ளதாகவும், மேற்கொண்டு பராமரிப்பு பணிகளுக்காக இரண்டு நிலங்களை விற்க வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் தரிசனம் எப்போது – யோகி ஆதித்யநாத் விளக்கம்

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓஷோ நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த தாக்கர்  “இவர்கள் போலியான காரணத்தைச் சொல்லி ஓஷோ அமைப்பின் நிலங்களை விற்க முற்படுகிறார்கள், உங்களால் ஓஷோ அமைப்பை ஒழுங்காக நிர்வகிக்க முடியவில்லை என்றால். அதை வேறு ஒருவரிடம் கொடுத்து விடுங்கள்”  என்று கூறியுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் நெடுங்காலமாகச் செயல்பட்டுக் கடந்த 2000 ஆம் ஆண்டு விலகிச் சென்ற சுவாமி சைத்தைன கீர்த்தி இந்த அமைப்பில் வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், நெடுநாட்களாகவே இதற்காகப் போராடி வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிலளித்துள்ள ஓஷோ பன்னாட்டு அமைப்பின் செய்தி தொடர்பாளர் மா அம்ரித் சாதனா ”இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அதுகுறித்து பதிலளிக்க இயலாது” என்று கூறியுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்