Aran Sei

கொரோனாவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு தடுப்பூசிகள் – அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

மெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் உலக சுகாதார அமைப்பால் பட்டியலிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை வணிகரீதியான சந்தையை விரைவு படுத்தும் நோக்கில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியை விட அதிக அவசர சட்டங்களை பிறப்பித்துள்ள பாஜக அரசு –  7 ஆண்டுகளில் 76 அவசர சட்டங்கள்

வெளிநாட்டு தடுப்பூசிகள் எளிதாக கிடைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ”மொத்த இறக்குமதி, உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவை ஊக்குவிக்கப்பட்டும்… இது மொத்த உற்பத்தி திறன் மற்றும் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்தலுக்கு இடையில் இருக்கு இடைவெளியைக் குறைக்கு உதவும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விதிகள் மாற்றம் செய்யப்பட்டதன் வாயிலாக, இந்தத் தடுப்பு மருந்துகளை நாடு முழுவதும் பயன்பட்டிற்கு வருவதற்கு முன்பு, இந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் 100 பயனாளர்களின் பாதுகாப்பு விளைவுகளுக்காக ஏழு நாட்கள் மதிப்பீடு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்