ஊரடங்கு முடியும் காலம்வரை ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என சென்னை போர்டு தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொழிற்சங்கத்தின் கோரிக்கை ஏற்காத நிர்வாகத்தைக் கண்டித்து இன்று (மே 27)மதிய உணவு புறக்கணிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போர்டு ஆலை நிர்வாகத்திற்கும் தொழிலாளர்கள் நல வாரிய ஆணையருக்கும் சங்கம் வழங்கியிருக்கும் கடிதத்தில், “மே 24 ஆம் தேதி முதல் மே 30 தேதிவரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை போர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் 230க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தும் உள்ளனர்.” என தெரிவித்துள்ளனர்.
தாருண் தேஜ்பால் விடுதலை – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்
”கொரோனா தொற்றால் ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சமூகத்திலும் நோய் பரவும் சூழலில் ஏற்பட்டுள்ளது.” என கூறியுள்ளனர்.
”கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். தொற்றுப் பாதித்த தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து, அதற்கான முழு செலவையும் நிர்வாகமே ஏற்க வேண்டும்.” என கோரிக்கை வைத்துள்ளனர்.
நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அறிவிக்கும், ஊரடங்கு முடியும் வரை ஆலை இயக்குவதை நிறுத்தி, தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
”கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியதில், நிர்வாகம் அளித்துவரும் பதில் ஏற்புடையதாக இல்லை. கோரிக்கைக்கு ஈடாக தொழிலாளர்கள் தற்போது பெற்று வரும் நலத்திட்டங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற வகையில் நிர்வாகம் பேரம் பேசுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. நிர்வாகத்தின் அணுகுமுறைக்குத் தொழிற்சங்கம் வருத்ததையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நிர்வாகத்திற்கு எதிர்ப்பைக் காட்டும் விதமாக இன்று மதிய உணவு புறக்கணிப்பு செய்துள்ளனர். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு நிர்வாகம் காலம்தாமதிக்காமல் நல்ல முடிவு எடுக்கும் நம்புகிறோம். மேலும், நிர்வாகத்திடம் கிடைக்கும் பதிலைப் பொறுத்து சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்யும் என தெரிவித்துக் கொள்கிறோம்” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.