Aran Sei

கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

ட்டாய மதமாற்றம் செய்யப்படுவது உண்மை என்றால் அது தீவிரமான விவகாரம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம், மத சுதந்திரத்தையும் பாதிக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்து கட்டாயமாக செய்யப்படும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரி பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இமாச்சல பிரதேசம்: கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை – சட்ட திருத்தத்தை கொண்டு வந்த பாஜக அரசு

இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற விசாரணையின்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மத்தியபிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மதம் மாறுவதற்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் அளிக்கப்பட்டு வரும் சம்பவங்களும் நடைபெறுகின்றன’ என அவர் வாதிட்டார்.

கட்டாய மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும். மத சுதந்திரம் இருக்கலாம், ஆனால் கட்டாய மதமாற்றச் சுதந்திரம் இல்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும்.இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இது தொடர்பாக கருத்து கூறியுள்ளது.

‘இந்துக்களை மதமாற்றம் செய்பவர்களின் தலையை வெட்டுங்கள்’ – பாஜக தலைவர்கள் முன்னிலையில் பேசிய இந்துத்துவ தலைவர்

மேலும் ‘கட்டாய மதமாற்றத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான பிரமாண பத்திரத்தை வருகிற 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

பல மாநிலங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளன.இவற்றில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் ஆகும்.

Source : the hindu

Wrote Book on MK Stalin, Quit Dinamalar | Dravidian Model | Kalaignar Karunanidhi | DMK

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்