Aran Sei

இரண்டாவது நாளாக அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை – மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 23) பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 80 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 97.01 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 88.27 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது .

நேற்றும் (மார்ச் 2), பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டன. மறுபுறம், சமையல் எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) விலையானது சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது.

நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடந்து, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்று வந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் 137 நாட்களாக மாற்றமடையாமல் இருந்தது.

137 நாட்களுக்கு பின் உயர்த்தப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை – சமையல் எரிவாயு விலை ரூ 50 உயர்வு

நேற்று (மார்ச் 22), நாடாளுமன்றத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

இவ்விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நடந்துள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, மக்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்