பாரதி ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும் பிரீபெய்ட் (Pre-paid) சேவைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் (Pre-paid) சேவைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக நேற்று (22.11.21) அறிவித்தது. பொருளாதார ரீதியில் ஆரோக்கியமான வணிகத்தை மேற்கொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
இன்று வோடஃபோன் ஐடியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிறுனம் சந்தித்துவரும் இழப்புகளை ஈடுபட்ட இந்த விலைஉயர்வு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரீபெய்ட் சேவைக்காண கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் இந்த விலை உயர்வு நவம்பர் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏர்டெல் பாரதி நிறுவனம் பிரீபெய்ட் அழைப்புக் கட்டணம் 20 முதல் 25 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் டேடா (Data) கட்டணம் 20 முதல் 21 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகைக்கான கால அவகாசத்தை நான்கு ஆண்டுகள் வரை நீட்டித்தும், அந்நிய நேரடி முதலீட்டை 100% அதிகரித்தும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
இது தொடர்பாக தொலைதொடர்புத்துறை அமைச்சர், அஷ்வினி வைஷ்னவ், செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “ இன்றைய தினம் (15.09.21) பிரதமர் நரேந்திர மோடி, மொத்த வருவாயில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை (AGR) அரசுக்கு செலுத்த வேண்டும் எனும் விதியில் ஒரு சிறப்பு வாய்ந்த முடிவை எடுத்த்துள்ளார். ஒரு நிறுவனத்தில், தொலைதொடர்புத்துறையை சாராத வருமானங்கள் மொத்த வரி வருவாயில் சேர்த்துக் கொள்ளப்படாது. ஒரு காலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிகமான வட்டி, உரிமத்துக்கான கட்டணம், அலைக்கற்றைக்கான கட்டணம், அபராதம், அபராதத்துக்கான வட்டி என கடும் விதிகள் இருந்தன. இது தற்போது சீர்திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைதொடர்பு துறையில் அதிகளவிலான முதலீடுகள் கிடைக்கும். முதலீடுகள் என்றால் வேலைவாய்ப்பு, எவ்வளவு அதிகம் முதலீடுகள் அதிகரிக்கிறதோ அவ்வளவு அதிகமாக வேலைவாய்புகள் உருவாகும்” என்று கூறினார்.
தொலைதொடர்பு அமைச்சகத்தின் தரவுகளின் படி, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்கள் அரசு வழங்கியுள்ள உரிமத்திற்காக ரூ 92,000 கோடியும், அலைக்கற்றைக்காக (Spectrum) ரூ 41,000 கோடியும் செலுத்த வேண்டும் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.