Aran Sei

கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ள விவசாயிகள் போராட்டங்கள் – 2019 ஆம் ஆண்டு 10,281 விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகள் தற்கொலை

டந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் (CSE) மையத்தின் தகவல் படி தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு 15 மாநிலங்களில் 34 முக்கிய விவசாயப் போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், ஆனால், தற்போது 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 165 விவசாயப் போராட்டங்களாக அது அதிகரித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு – காசியாபாத் ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட நகலை எரித்த விவசாயிகள்

சி.எஸ்.இ அறிக்கையின் படி, இந்தியாவெங்கும் பரந்துபட்ட அளவில் 12 போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 11 போராட்டங்கள் ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்தவை என்றும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சட்டங்களுக்கு எதிரான 96 % பெரும் போராட்டங்களுக்கு வேளாண் துறையில் அரசு இயற்றிய சட்டங்கள் மற்றும் போதிய நிதி ஒதுக்காததுமே போராட்டங்களுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளதாவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

டெல்லி போராட்டத்திற்கு திரும்பும் ஹரியானா விவசாயிகள் – வேகமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்

அதுமட்டுமல்லாது, வளர்ச்சி திட்டங்களுக்கென்று நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக 17 போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், சந்தை தோல்வி மற்றும் போதிய விலை கிடைக்காததற்கு எதிராக 38 பெரும் போராட்டங்கள் நடந்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சி.எஸ்.இ அறிக்கையின் படி, கடன் தள்ளுபடி, போதிய பயிர் காப்பீடு கிடைக்காததால் ஏறத்தாழ 7 முறை விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளதாகவும், இதே போன்று, 2020-21 காலகட்டத்தில் வேளாண் ஈடுபொருட்கள், அடிப்படை வசதிகள், பாசன வசதி ஆகியவற்றிக்காக குறைந்தபட்சம் நான்கு தடவையாவது விவசாயிகள் போராடியுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

போராட்டத்திற்கு திரும்பும் விவசாயிகள் –  கொரோனா பரவல் குறைந்தால் எண்ணிக்கை அதிகரிக்கும் என விவசாய சங்கங்கள் தகவல்

ஒடிசா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக விவசாயப்போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், குறிப்பிடத்தகுந்தவாறு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லி பகுதியில் போராடிவருவதாகவும் சி.எஸ்.இ அறிக்கை கூறுவதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாளொன்றுக்கு 28 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகள் இறந்து வருவதாகவும், கடந்த 2019 ஆண்டு 5,957 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு  இறந்துள்ளதாகவும், 4,324 விவசாயக்கூலிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக சி.எஸ்.இ அறிக்கை தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்