Aran Sei

ராமர் கோயில் கட்டுமானம் – போலியாக நன்கொடை பெற்றதாக ஐந்து பேர் மீது வழக்கு

credits : the indian express

த்தர பிரதேசத்தில், ராமர் கோயில் கட்டுமானத்திற்காக, போலியாக நன்கொடை பெற்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின், அயோத்தி நகரத்தில், 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்து பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

அயோத்தி ராமர் கோயில் கட்ட மக்களிடம் பணம் மோசடி – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ராமர் கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ள,  மத்திய அரசு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்தது. அந்த அறக்கட்டளை தற்போது ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடையை பெற்று வருகிறது.

இந்நிலையில், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த அனில் மிஷ்ரா, ராமர் கோயில் கட்டுமானம் என்ற பெயரில் போலியாக நன்கொடை பெற்று வருவதாக இரண்டுபேர் மீது, காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

அயோத்தி ராமர் கோயில் : ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய பாஜக எம்.பி கவுதம் கம்பீர்

அந்தப் புகாரில், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் இணையதளத்தைப் போலவே, ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, வங்கி கணக்குகளின் தரவுகள் அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு பணம் செல்லும் வகையில் க்யூஆர் கோட் (QR CODE) போன்றவற்றை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் நிதி திரட்டல் – மணிஷ் திவாரி கடும் எதிர்ப்பு

அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை, போலியாக நன்கொடை பெற்ற குற்றச்சாட்டில், தேஜ்வீர் சிங், கவுரவ் குமார் ஆகிய இருவர் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 420, 429, 66, 66 டி ஆகியற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

ராமர் கோவிலுக்காக காங்கிரஸ் நிதி திரட்டல் – காட்டுப்பகுதியில் மணற்கல் எடுப்பதற்கு ராஜஸ்தான் அரசு அனுமதி

இந்நிலையில், அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராமர் கோயில் கட்டுமானத்திற்காக போலியாக நன்கொடை வாங்கியதாக, இதுவரை ஐந்து பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டிய கர்நாடக அமைச்சர் – மக்களின் பங்களிப்பை உறுதிசெய்ய நிதி பெறுவதாக கருத்து

ராமரின் பெயரில், நாடு முழுவதும் ”மத ஊழல்”  நடக்கிறது என்றும், கோயில் கட்டுவதற்காக வசூலிக்கப்படும் நன்கொடை, உண்மையிலேயே கோவில் கட்டுமான நிதி உரியவர்களிடன் சென்றடையும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று, கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்