மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கட்சிரோலி பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ஐந்துபேரை, அம்மாநில காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது.
“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்
கட்சிரோலி பகுதியில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என அம்மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
கடந்த சனிக்கிழமை (மார்ச் 27) அந்த பகுதியிலிருந்து துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நக்சல் வாரம் கடைபிடிக்க, மாவோயிஸ்டுகள் கட்சிரோலி பகுதியில் திரண்டு வரும்நிலையில், சி-60 கமாண்டோ படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, 60 முதல் 70 நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, இரு தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 5 நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.