Aran Sei

ஆக்ஸிஜன் பற்றாகுறையால் ஐவர் பலியானதாக புகார் – கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறதா தமிழகம்?

வேலூர் மாவட்டம்  அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஆக்ஸிஜன்  தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் மருந்து, தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் போன்றவற்றிற்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகள் புகார் தெரிவித்து வருகின்றன.

‘ஆக்சிஜன் இப்போது டெல்லியின் எமர்ஜென்சி’ – ஆக்சிஜன் வழங்கும்படி டெல்லி முதல்வர் பிரதமருக்கு கடிதம்

தடுப்பு மருந்துகளைச் செலுத்திக்கொள்ள இந்தியாவில் உள்ளவர்கள் நேபாளம் செல்வதாக தகவல் வந்தவாறு இருக்கிறது.

முன்னர், ஆக்ஸிஜன் பற்றாகுறையால் குழந்தைகள் பலியான சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.

‘இது ஒரு போர் சூழல்; கொரோனா குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்’ – மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

டெல்லியில் ஆக்சிஜனுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தீவிரமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைச் சமாளிக்க, டெல்லிக்கு வழக்கமாக தரப்படும் அளவை விட, அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

தேவைபடும் இடங்களுக்கு ஆஸிஜனை ரயில் வழியே ஏற்றி செல்ல  ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ மத்திய அரசால் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த குழந்தைகள்: விபத்தை வெளிகொணர்ந்த மருத்துவரை குற்றாவாளிகள் பட்டியலில் இணைத்த யோகி அரசு

மாநில அரசுகளின் தகவல்களின் வழியே இந்தியா முழுக்க ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Source: Puthiya Thalaimurai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்