சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை ஜம்மு காஷ்மீர் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆனாலும், எங்கள் அடையாளம் தொடர்பான விஷயமாக என்பதால், ஜம்மு காஷ்மீரின் 370 வது பிரிவை மீட்டெடுப்போம் என்றும் பிரதமர் மோடியிடம் கூறினோம் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனம் பிரிவு 370ன் கீழ், காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்து சிறப்பு அந்தஸ்தைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற்றது.
நேற்று (ஜூன் 24), பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில், காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவாமி தேசிய மாநாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.
காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்
அக்கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்துத்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “தோராயமாக 80 சதவீத கட்சிகள் 370 வது பிரிவு குறித்துப் பேசினார்கள். ஆனால், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. மாநில அந்தஸ்த்தை திரும்ப வழங்குவது, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக சட்டபேரவை தேர்தலை நடத்துவது, காஷ்மீர் பண்டிதர்களின் மறுவாழ்வு நடவடிக்கை எடுப்பது, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது மற்றும் காஷ்மீரின் பிரதியேக விதிகள் என்று பேச்சுவார்த்தையில் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் (ஜூன் 23), மாநில அந்தஸ்த்தை திரும்பப் பெறும் கோரிக்கை குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி கூறுகையில், கால்களை வெட்டியபிறகு ஒரு ஷூவை வழங்குவது எப்படி அன்பளிப்பாகாதோ அதேபோல, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்தை திரும்பத் தருவது அன்பளிப்பல்ல என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source; newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.