Aran Sei

இந்திய மீனவர்களைக் கொன்றதாக குற்றச்சாட்டப்பட்ட இத்தாலிய கடற்படையினர் – வழக்கை நீக்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

டந்த 2012 ஆம் ஆண்டு கேரள கடற்பகுதியில் இரண்டு மீனவர்களைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இத்தாலிய கடற்படையினர் மீதான வழக்கை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது- ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, இரண்டு மீனவர்களைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இத்தாலிய கடற்படையினரான மாசிமிலனோ லடோரே மற்றும் சால்வடோர் ஜிரோன் மீதான முதல்தகவல் அறிக்கை மற்றும் குற்ற நடவடிக்கைகளை நீக்கி உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

மேலும், இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச விதிகளின் படி, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாகவும், மேற்கொண்டு விசாரணையை இத்தாலி அரசு மேற்கொள்ளும் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தொழில்நுட்ப ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் கோவின் இணையதளம்” – உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

அதுமட்டுமின்றி, 10 லட்சம் இழப்பீட்டை ஏற்கனவே இத்தாலி அரசு செலுத்தியுள்ளதாகவும், இந்த தொகை இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்