Aran Sei

காட்டுப்பள்ளிக்குப்பத்தை மீன்பிடி தடை பகுதியாக அறிவிக்கக் கோரிய அதானி – தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

காட்டுப்பள்ளிக்குப்பம் பகுதியை மீன்பிடி தடை பகுதியாக  அறிவிக்கக் கோரிய அதானி துறைமுக நிர்வாகத்திற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள காட்டுப்பள்ளிகுப்பத்தில்  அமைந்த அதானி துறைமுகத்தைச் சுற்றியுள்ள 7.7 சதுர கிலோமீட்டர் பகுதியை மீன்பிடி தடை பகுதியாக அறிவிக்கக் கோரி டேராடூனில் உள்ள தேசிய கடலியல் அலுவலகத்தின் இயக்குனருக்கு அதானி துறைமுக நிர்வாகம் 2019 ஆம் ஆண்டுக் கடிதம் எழுதியுள்ளது.

மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள், அதானி துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவதால், அந்தப் பகுதியை மீன்பிடி தடை பகுதியாக அறிவிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதானி துறைமுகத்தின் கடிதம் தொடர்பாகப் பேசுமாறு அனைத்து கட்சிகளுக்கும் காட்டுப்பள்ளிக்குப்பம் மீனவ பஞ்சாயத்து சார்பில், கடிதம் அனுப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களை எதிரியாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாஜக – : பத்ருத்தின் அஜ்மல்

காட்டுப்பள்ளிக்குப்பம் பகுதியில் 200 மீனவ குடும்பங்கள் கடல் வளங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வசித்து வருகின்றன. துறைமுகமும்  தொழிற்சாலைகளும் இப்பகுதியில் அதிகரித்து வருவதால் மீனவர்களின் வாழ்வில் பெரும் நெருக்கடி  ஏற்பட்டுள்ளதாக மீனவர் அமைப்பைச் சேர்ந்த டி.கண்ணன் தெரிவித்துள்ளார்.

கடலோர ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சரவணன், “அதானி துறைமுகத்தைச் சுற்றியுள்ள 7.7 சதுர கிலோமீட்டரை மீன் பிடி தடை பகுதியாக அறிவிக்ககோரும் அதானியின் கடிதம் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் பெறப்படவில்லை என மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்”. எனக் குறிப்பிட்டார்.

Source : Times of India  

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்