அரபு நாடுகளின், வேற்றுகிரக விண்வெளிப்பயணத்தின் முதல் வெற்றியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளது.
செவ்வாயின் வளிமண்டலம் குறித்த தரவுகளைச் சேகரிக்கப்பத்தற்காக அனுப்பட்டுள்ள ‘அமல்’ என்ற விண்கலம், 300 மில்லியன் மைல்கள் பயணத்தை, ஏழு மாதங்களில் நிறைவு செய்து செவ்வாய் கிரகத்தை சுற்றிவரத் தொடங்கியுள்ளது.
அரபு மொழியில் ‘அமல்’ என்பதற்கு ‘நம்பிக்கை’ என்று அர்த்தம்.
அமல், வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் வலம்வரத் துவங்கியுதும், துபாயில் உள்ள, ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள், கைகளைத் தட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
விசாகப்பட்டினம் உருக்கு ஆலை – ” உயிரே போனாலும் தனியாருக்கு விற்க அனுமதிக்க மாட்டோம்”
இது தொடர்பாகப் பேசிய திட்ட இயக்குனர், ஓமன் ஷெரீப், “ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் பயணம் வெற்றியடைந்திருப்பதாக, ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்குத் தெரிவித்து கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
அமல் விண்கலத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சீனா ஏவிய இரண்டு ஆளில்லாத விண்கலங்கள், இன்னும் சில தினங்களில் செவ்வாயின் சுற்று வட்ட பாதையை அடையவுள்ளன.
இந்த வெற்றியின் மூலம், செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய ஐந்தாவது நாடு என்ற வரலாற்றை நிகழ்த்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். பூமிக்கு வெளியே, மற்றொரு கோளுக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் பயணத்திலேயே வெற்றியடைந்திருப்பது மற்றொரு சாதனையாகும்.
திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நிகழ்ந்தால், அடுத்த இரு மாதங்களில், செவ்வாயை சுற்றி நீள்வட்டப்பதையில், 22 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 44 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் அமல் நிலைநிறுத்தப்பட்டு, அனைத்து பருவநிலைகளிலும், நாள் முழுவதும் செவ்வாயின் வளிமண்டலம் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நாசாவின் அறிவியல் திட்டத் தலைவர், தாமஸ் சர்பூச்சென், “செவ்வாயை ஆராய நீங்கள் (ஐக்கிய அரபு அமீரகம்) எடுத்திருக்கும் இந்த முயற்சி, மேலும் பலரை ஊக்குவிக்கும். செவ்வாய் கிரகத்தில் விரைவில் உங்களுடன் இணைகிறோம்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக விண்வெளி மையத்தின் தலைவர், அல்-அமீரி, ”இன்று அமீரகத்தின் ஒவ்வொருவரும், விண்வெளி குறித்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள், அறிவியலைப் புரிந்து கொள்கிறார்கள். இந்த வெற்றி அமீரகம் மட்டுல்லாது அரபு உலகத்திற்கும் ஒரு புதிய பரந்த சாத்தியகூறுகளை திறந்து விட்டிருக்கிறது”
Sources : AP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.