Aran Sei

சட்டப்பேரவை தேர்தல் – அசாமில் 72%, மேற்கு வங்கத்தில் 80% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்

மேற்கு வங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவையில் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், மேற்கு வங்கத்தில் 80 விழுக்காடு, அசாமில் 72 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியிருப்பதாக, தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் ஒரு பகுதியாக, அசாமில் 47 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் முதற் கட்ட தேர்தல் நேற்று (மார்ச் 27) நடைபெற்றது.

வாக்குச்சாவடி முகவர்களுக்கே பாஜகவில் திண்டாட்டம் – வெளியான பாஜக தொண்டர்களின் தொலைபேசி உரையாடல்

இதில் மாலை 5 மணி நேர நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் 79.79 விழுக்காடும், அசாமில் 72.14 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்டாய மதமாற்றுவதாக மிரட்டிய ஏபிவிபி அமைப்பினர்- கேரள கன்னியாஸ்திரிகள் காவல் நிலையத்தில் புகார்

அசாம் மாநிலத்தின் 47 தொகுதிகளில் 23 பெண்கள் உட்பட 264 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் 47 தொகுதிகளில் 191 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்