Aran Sei

தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதல் ஐந்து கையெழுத்துகள் – முழுவிபரம்

மிழக முதல்வராக பதிவியேற்றுள்ள ஸ்டாலின், தனது முதல் உத்தரவில், கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு ரூ.4,000 வழங்கவும், ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்தும் ஆணையிட்டுள்ளார்.

இன்று (மே 7) காலை, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதிவியேற்றவுடன் தலைமை செயலகத்திற்கு சென்று ஐந்து முக்கிய ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

முதல் கையெழுத்து

கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ள இச்சூழலில், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் ரூ.4,000 வழங்கும் ஆணையில் முதல்வர் ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தையிட்டுள்ளார்.

‘தமிழகத்தின் உரிமைகளை மிட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

இதன்படி, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,153.39 கோடி செலவில் ரூ.2,000 வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கப்படும் என்று அரிசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கையெழுத்து

வரும் 16 ஆம் தேதியில் இருந்து, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்ய உத்தரவிடும் ஆணையில் இரண்டாம் கையெழுத்தை முதல்வர் ஸ்டாலின் இட்டுள்ளார்.

மூன்றாம் கையெழுத்து

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும், நாளை (மே 8) முதல் பயணம் செய்ய வழிவகை செய்யும் ஆணையில் மூன்றாவதாக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்தை இட்டுள்ளார்.

இதன் வழியாக, போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ.1,200 கோடி மானியமாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

“பொது நலனில் மட்டுமே தனி மனிதர் நலன் காண முடியும்” – முதலமைச்சர் அண்ணாவின் முதல் உரை

நான்காவது கையெழுத்து

தமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பரப்புரையின் போது மாவட்டம்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் நூறு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன் பொருட்டு, தனது நான்காவது கையெழுத்தாக, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி, அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணையில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

ஏழைகளின் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் – தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

ஐந்தாவது கையெழுத்து

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அச்சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசே ஏற்கும் ஆணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசே வழங்கும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்