Aran Sei

போராட்ட களத்தில் வீடுகட்டிய விவசாயிகள் – சட்ட விரோதமென காவல்துறை வழக்குப் பதிவு

டெல்லி திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அப்பகுதியில் செங்கல் கற்களால் ஆன வீடுகளை கட்டியதற்கு, நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்கியது, சட்டவிரோதமாக சாலையில் துளையிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

டெல்லி எல்லயில் உள்ள சதர் பகதர்கர் காவல் நிலையத்திலும் சிட்டி பகதர்கர் காவல் நிலையத்திலும்  இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோடைகாலத்தை எதிகொள்ள போராட்ட களத்தில் செங்கல் வீடுகள் – முடிவில்லா போராட்டம் நோக்கி விவசாயிகள்

பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம், 1984-ல் உள்ள பிரிவு 3 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 283 (பொது பாதையில் தடைகளை ஏற்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ், இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அச்செய்தியில், சித்தார்த் சிங் என்பவர் அளித்த புகாரில், “எச்.எஸ்.வி.பி சாலையில் மாஹூதி பயிற்சி பள்ளி மற்றும் ஆர்டிஏ அலுவலகத்திற்கு எதிரே சிலர் நிரந்தர கட்டடங்களை எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து, எங்கள் அலுவலகத்துக்குத் தகவல் வந்தது. மேலும், அடையாளம் தெரியாத நபர்களால், சட்டவிரோதமாக சாலையில் துளைகள் போடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அரசாங்க சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. ஆகவே, இந்தச் சட்டவிரோத கட்டுமானத்தை உடனே நிறுத்தி, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.” என்று  தெரிவித்துள்ளார்.

‘என் கடைசி ஆசையாக விவசாய சட்டங்களை நீக்குங்கள்’ – தற்கொலைக்கு முன் விவசாயியின் உருக்கமான கடிதம்

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்த சதர் பகதூர்கர் காவல் நிலைய ஆய்வாளர் சுனில் குமார் கூறுகையில், “எங்கள் காவல் நிலையத்தில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற வழக்கு, சிட்டி பகதூர்கர் காவல்நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்