Aran Sei

மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் பலி – விசாரனை நடத்த அரசு உத்தரவு

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 900 கி.மீ.தொலைவில் உள்ள பண்டாரா மாவட்டத்தில் உள்ள நான்கு மாடிகொண்ட அரசு மருத்துவமனை ஒன்றில் இந்தக் கோரச் சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நடந்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

பண்டாரா மாவட்டப் பொது மருத்துவமனையின் பிறந்த குழந்தைக்கான சிறப்புப் பராமரிப்புப் பிரிவுவில் (Special Newborn Care Unit) இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் இறந்தனர்.

உத்தர பிரதேசத்தின் திருமண சட்டம் – வெறுப்பை சட்டமாக்கும் இருண்ட நடவடிக்கை

மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கான சிறப்புப் பராமரிப்புப் பிரிவு (Special Newborn Care Unit ) வார்டில் பதினேழு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்னர். அவர்களில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 குழந்தைகள் தீயணைப்புப் படை அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்; வெளியேறும் பகுதியில் இருந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை மீட்க முடியவில்லை. மூச்சுத் திணறல் காரணமாக குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறதென்று எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

“குழந்தைகள் பிரிவிவில் இருந்து புகை வந்ததை மருத்துவமணை செவிலியர் கண்டு அலாரத்தை ஒலிக்கச்செய்துள்ளார். பிறகு உள்நோயாளிகளை பத்திரமான இடத்திற்கு மாற்றினோம். இருந்தும் நிலைமை கைமீறி போய்விட்டது” என்று   இந்தத் தீ விபத்துக் குறித்து மாவட்ட சிவில் சர்ஜன் பிரமோத் கண்டேட் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் என்கவுன்டர் – நீதி வேண்டும் : போலீஸ் விளக்கத்தை மறுக்கும் இளம் காஷ்மீரிகளின் குடும்பத்தினர்

“மகாராஷ்டிராவின் பண்டாராவில் நெஞ்சைப் பிளக்கும் சோகம் நடந்துள்ளது. அங்கு நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம். என் எண்ணங்கள் முழுவதும் துயரமடைந்த அனைத்துக் குடும்பங்களுடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டப் பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் துயரமானது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கல். காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மகாராஷ்டிர அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே  தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.  இந்த விபத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்