Aran Sei

ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக எம்.பிக்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு – காங்கிரஸ் கட்சி

த நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ராகுல்காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் சுப்ரத் பதக் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கேரளாவின் வயநாட்டில் பேசிய ராகுல் காந்தி, அவரது நாடாளுமன்ற அலுவலகத்தை சேதப்படுத்திய எஸ்.எஃப்.ஐ அமைப்பினரை குழந்தைகள் என்று கூறியதை, அவர் உதய்பூர் கொலை வழக்கில் குற்றம் சாட்டியவர்களை கூறியதாக திரித்துக் கூறப்பட்ட காணொளியை ஜீ தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.பிறகு ஜீ தொலைக்காட்சி காட்டிய இந்த போலிச் செய்தியை பாஜக பிரமுகர்கள் அவர்களது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்தனர்.

ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – காங்கிரஸ் கட்சி

ராகுல் காந்தி பேசிய முழு காணொளியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கோரா, சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஸ்ரீனாட், ஆகியோர் வெளியிட்டனர். திரிக்கப்பட்ட காணொளிகளை பகிர்ந்தவர்கள் மன்னிப்பு கோராவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த திரிக்கப்பட்ட காணொளியை ஜீ தொலைக்காட்சி நீக்கிவிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட பதிவை ஜீ தொலைக்காட்சியின் தொகுப்பாளரும் அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

மேலும், திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்தது தொடர்பாக பாஜக தேசிய தலைவருக்கு ஜே.பி. நட்டாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு அணித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மோடி, நாட்டின் இளைஞர்களை வேலை இல்லாமல் ஆக்குகிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

அதில், “சமூக வலைத்தளங்களில் இது போன்ற அப்பட்டமான பொறுப்பற்ற மற்றும் கிரிமினல் முறையில் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கோராவிட்டால், பாஜக மற்றும் அதன் பிரமுகர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்திருந்தார்.

அதன்படி டெல்லி, ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் 3 நபர்கள் மீது காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது என்று அக்கட்சியின் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஸ்ரீனாட் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலி செய்திகளை பரப்புவது தேசத்துரோக செயலாகும். இவர்கள் ஏன் இப்படி வெறுப்பு தீயை நாடு முழுவதும் பரப்புகிறார்கள். 2 ரூபாய்க்காக போலி செய்திகளை பரப்புபவர்களாக அவர்களை ஏன் மாற்றினீர்கள் என்று பிரதமர் மோடியிடம் கேட்கிறோம். போலி செய்திகளை பரப்புபவர்களுக்குத்தான் பாஜகவில் பதவி உயர்வு கிடைக்கிறது அதுதான் பிரச்சினை என்று சுப்ரியா ஸ்ரீனாட் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுடன் பாஜகவிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பிடிபட்டுள்ள தீவிரவாதி தலிப் ஷா, காஷ்மீர் மாநில பாஜக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உதய்பூர் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவரான ரியாஸ் அட்டாரியும் பாஜக உறுப்பினர்தான் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கோரா குற்றம் சாட்டியுள்ளார்.

Source : newindianexpress

பத்தல பத்தல GST பத்தல | சாவி இப்போ திருடன் கையில

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்