டெல்லி விவசாயிகள் சங்கம் தொடர்பாகத் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்ததன் மூலம் குற்றவியல் சதித்திட்டத்தில் பங்கேற்றதாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும், காலநிலை ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிந்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாகப் போராட்டம் நடக்கும் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டதாக சிஎன்என் இணையதளத்தின் செய்தியைப் பிப்ரவரி 3 ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கிரெட்டா தன்பெர்க், அதில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் ஒற்றுமையாக நிற்கிறேன் என்று கூறியிருந்தார்.
அந்த ட்விட்டரின் பதிவின் தொடர்ச்சியாக ஒரு ’தொகுப்பை (tool kid)’ பகிர்ந்த கிரெட்டா, இது விவசாயிகள் போராட்டத்திற்கு உதவும் என்றும், இந்திய தூதரகத்திற்கு வெளியே போராடுபவர்களுக்கு ஆதரவு திரட்டப் பயன்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
Here’s an updated toolkit by people on the ground in India if you want to help. (They removed their previous document as it was outdated.)#StandWithFarmers #FarmersProtesthttps://t.co/ZGEcMwHUNL
— Greta Thunberg (@GretaThunberg) February 3, 2021
தன்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைக்குப் பதில் சொல்லும் விதமாக ”நான் இன்னும் விவசாயிகள் உடன் இருக்கிறேன், அவர்களின் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். எந்தவொரு வெறுப்பு, அச்சுறுத்தல்கள் அல்லது மனித உரிமை மீறல்கள்மூலம் அதை மாற்ற முடியாது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
I still #StandWithFarmers and support their peaceful protest.
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest— Greta Thunberg (@GretaThunberg) February 4, 2021
தகவலின்படி இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசின் பரிந்துரையில் இருக்கும், கிரெட்டா தன்பெர்க் மீது பிரிவு 120B (கிரிமினல் சதி) மற்றும் பிரிவு 153A (மதம், இனம் அடிப்படையில் வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாக தி வயர் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.