2019ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ ராஜ சோழன் குறித்து பேசியதற்காக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ராஜராஜ சோழன் குறித்து பேசியதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
நீலப்புலிகள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
பா. ரஞ்சித் தாக்கல் செய்த மனுவில், ராஜராஜ சோழன் காலத்தில் நிலப்பிரச்சினைகள் குறித்து பேசினேன். எந்த ஒரு சமூகத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்துவது நோக்கமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதே எனது நோக்கம். டெல்டா பகுதி மக்கள் நிலமற்றவர்களாக மாறிய விதம் குறித்து பேசினேன். மேலும், சாதி வெறியை அழித்து சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கம்தான் என்னுடையது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.