Aran Sei

உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை

credits : the scroll

க்சிஜன் சிலிண்டர் கோரி டிவிட்டரில் பதிவிட்ட நபர் மீது, உத்தர பிரதேச அரசு குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி, இணைய வழியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ”உத்தர பிரதேசத்தில் இருக்கும் எந்த மருத்துவமனையிலும் (அரசு மற்றும் தனியார்) ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவவில்லை. ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்குவதாலும், கருப்புச் சந்தையில் விற்கப்படுவதும் தான் தட்டுப்பாட்டிற்கு காரணம்” என்று கூறியிருந்தார்.

மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக சமூக வலைதளங்களில் போலியான வதந்திகளை பரப்புவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அமேதி பகுதியில் வசிக்கும் ஷாஷங்க் யாதவ் எனும் நபர், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியன்று, தன்னுடைய தாய் வழி தாத்தாவுக்கு ”எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை” என பாலிவுட் நடிகர் சோனு சூத்தை இணைத்து (Tagged) ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஷாஷங்க் யாதவினுடைய நண்பர் அங்கித், அந்த ட்விட்டர் பதிவின் மூலமாக தி வயர் இணையதளத்தின் செய்தியாளர் அர்ஃபா கானும் ஷெர்வானியை அந்த பதிவில் இணைத்திருந்தார். செய்தியாளர் ஆர்ஃபா, இச்செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அர்ஃபாவின் அந்தப் பதிவு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், இதற்கு 30 நிமிடங்களுக்குள் பதிலளித்த ஸ்மிரிதி இரானி, ”நீங்கள் கொடுத்திருக்கும் எண்ணின் வழியே, ஷாஷங்கை மூன்று முறை தொடர்பேசியில் அழைத்தேன், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அமேதியின் மாவட்ட நிர்வாகத்தையும், காவல்துறையையும் அந்த நபரை கண்டுபிடித்து தேவையான உதவியை செய்ய வலியுறுத்தியுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே , ஷாஷாங்கின் தாய் வழி தாத்தா மரணமடைந்து விட்டதாக பத்திரிகையாளர் ஷெர்வானி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தியை பரப்பியதாக அமேதி காவல்துறை, ஷாஷங்க் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக தி ஸ்க்ரால் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவின் ஜிகாத்திய இயக்கங்களுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆதரவளிக்கிறது – யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச காவல்துறை, ” ஷாஷங்கை உடனடியாக தொடர்பு கொண்ட போது, 88 வயதாகும் அவருடைய தாத்தா கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதையும் அவருக்கு ஆக்சிஜனை மருத்துவர்கள் பரிந்துரை செய்யவில்லை என்பதையும் கண்டறிந்தோம். அவர் இதய வலியால் 8 மணியளவில் மரணமடைந்திருக்கிறார். இந்தச் சூழலில் இது போன்று பதிவிடுவது கடுமையான கண்டனத்திற்குரியது மட்டுமல்ல சமூக வலைதளங்களில் அச்சமூட்டும் வகையில் பதிவிடுவது சட்டத்திற்கு புறம்பானதும் கூட” என்று பதிவிட்டுள்ளார்.

‘யோகி ஆதித்யநாத்தின் உரை மூலம் தெரிகிறது கலாச்சார காவலர்களின் அறிவு’ – காங்கிரஸ் விமர்சனம்

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 188, 269, 505 (1), (B) சட்டத்தின் கீழும், கொள்ளை நோய் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும் அமேதி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்திய பாரம்பரியத்துக்கு மதசார்பின்மை பெரிய தீங்கு – யோகி ஆதித்யநாத்

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் அதே வேளையில், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை அமேதி காவல்துறை கருத்தில் கொள்ளவில்லை என்று தி ஸ்க்ரால் இணையதளம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்

கடந்த வாரம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி சமூக வலைதளங்களில் ( ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) இருந்து கொரோனா தொடர்பாக வெளியான 100 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது .

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்