Aran Sei

அடித்துக் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர் – கண்டனம் தெரிவித்து டிவீட் செய்தவர் மீது வழக்கு

லிகார் இஸ்லாமிய பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் ஷர்ஜீல் உஸ்மானி மீது சர்ச்சைக்குரிய ட்வீட்களை வெளியிட்டதாக கூறி, மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

ஹரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஆசிப் ஒரு கும்பல் கொலை செய்தது.

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்திருந்த ஷர்ஜீல் உஸ்மானி, “ஒரு இந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குவது ஒரு தீவிரவாதத்தை போல உள்ளது” என்று தெரிவித்திருந்தார். அத்தோடு, ஜஸ்டிஸ் ஃபார் ஆசிப் என்ற ஹேஷ்டாக்கையும் இணைத்திருந்தார்.

ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு மசூதியின் மின்னணுசாதனங்களை மிரட்டி எடுத்து சென்றதாக புகார் – வழக்குப்பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

அதைத்தொடர்ந்து, இந்து ஜாக்ரான் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த அம்பதாஸ் அம்போர் அளித்த புகார் அளித்துள்ளார். உஸ்மானி தனது சமீபத்திய ட்வீட்டுகளில் இந்து கடவுளான ராமரை ப்ற்றி அவமரியாதையான சொற்களைப் பயன்படுத்தியதாகவும், இதன் வழியாக மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில், நேற்று (மே 19) இரவு, உஸ்மானி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295-ஏ (மத உணர்வுகளை மீறும் தீங்கிழைக்கும் செயல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீமும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எல்கர் பரிஷத் 2.0: அலிகர் முஸ்லீம் பல்கலை., முன்னாள் மாணவர் கைது – மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு

இந்த ஆண்டின் தொடக்கத்தில், புனே காவல்துறையினர் எல்கர் பரிஷத் மாநாட்டின்போது ஆற்றிய உரை தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (ஏ) (மதத்தின் அடிப்படையில் இரண்டு குழுவிற்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவது) கீழ் உஸ்மானி மீது வழக்கு பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்