Aran Sei

பிராமணர்களை விமர்சித்த முதலமைச்சரின் தந்தை – வழக்குப்பதிந்த சத்தீஸ்கர் காவல்துறை

பிராமணர்கள் குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த   சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் புபேஷ் பாகலின் தந்தை  நந் குமார் பாகல் மீது  ராய்ப்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

முதலமைச்சர் புபேஷ் பாகலின் தந்தை  நந் குமார் பாகல் , “பிராமணர்கள்  வெளியிலிருந்து வந்தவர்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். கிராமத்திற்குள் அவர்களை அனுமதிக்கக் கூடாது” எனக்  கூறியிருந்தார்.

மேலும்,  இதுகுறித்து தெரிவித்திருந்த முதலமைச்சர்  புபேஷ் பாகல், தனது தந்தையின் இந்தக் கருத்துக்கள் மனதை புண்படுத்துகிறது என்றும், தனது அரசில் சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘சர்வ் பிராமண சமாஜ்’  என்ற பிராமண அமைப்பு முதலமைச்சரின் தந்தை மீது புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு  153-A,  505(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நந் குமார் பாகலின் தந்தை எந்த அரசியல் கட்சியிலும் இல்லை,  அவர் அவரது முகநூல் கணக்கில்  அவரை விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

source:தி  வயர்

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்