Aran Sei

தேசிய புலனாய்வு முகமைக்கு ஆறு புதிய கிளைகள்: உள்துறையின் முன்மொழிவுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல்

கமதாபாத், பெங்களூரு, பாட்னா, ஜெய்ப்பூர், போபால் மற்றும் புவனேஸ்வர் ஆகிய ஆறு நகரங்களில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) புதிய கிளைகளை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆறு நகரங்களில் தேசிய புலனாய்வு முகமையின் அலுவலகங்களை அமைக்கவும், அவற்றின் வழியாக 435 பணியிடங்களை உருவாக்கவும் கோரிய ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் திட்டத்திற்கு ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து, ஒன்றிய நிதி அமைச்சகத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சராசரியாக 72 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை பணியமர்த்தக் கேட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், நிதி அமைச்சகம் 50 உறுப்பினர்களை மட்டுமே நியமிக்க அனுமதியளித்துள்ளது.

பெங்களூரு, பாட்னா மற்றும் போபால் கிளைகளுக்கு துணை ஆய்வாளர் ஒருவர் தலைமை தாங்குவார் என்றும், மற்ற மூன்று கிளைகளுக்கு கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் தலைமை தாங்குவார் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்