Aran Sei

கடந்த மூன்று நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 4.90 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி – மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டந்த நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் 1,31, 894 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், மூன்று நிதியாண்டுகளில் மொத்தமாக சேர்த்து 4,90,162 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஒன்றிய அரசின் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாயா வர்மா மற்றும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் சுக்கம் சிங் யாதவ், விசம்பர் பிரசாத் நிசாத் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் நிதித்துறை இணையமைச்சர் மருத்துவர் பாக்வாத் கராத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொதுத் துறை வங்கிகளில் 2018-19, 2019-20, 2020-21, 2021-22 (இன்றைய தேதிவரை) நிதியாண்டுகளில் செயல்படாத சொத்துக்களாக அறிவிக்கப்பட்ட கடன்கள் விவரங்கள் வங்கி வாரியாக மற்றும் வருட வாரியாக அளிக்க வேண்டும் மற்றும் அதே நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் வங்கி வாரியாக, ஆண்டுவாரியான விவரங்கள் அளிக்க வேண்டும்.” என்று அவர்கள் கோரியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசின் நிதித்துறை இணையமைச்சர் பாக்வாத் கராத், “பொதுத்துறை வங்கிகளில் மொத்தமாக செயல்படாத சொத்துக்களின் வங்கி வாரியான விவரங்கள் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

“2020-21  நிதியாண்டில் அனைத்து வங்கிகளும் சேர்த்து மொத்தமாக 1,31,894 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. 2018-19 நிதியாண்டில் இருந்து 2020-21 நிதியாண்டு வரை மொத்தம் 4,90, 162 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.

மேலும், ஒன்றாக இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் இணைக்கப்பட்ட தேதி ஆகியவற்றையும் அமைச்சர் அவரது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்