தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்தாகவே பார்க்கமுடியும் என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நேற்று (மே 8), சென்னை மியூசிக் அகாடமியில் துக்ளக் வார இதழின் 52 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அவ்விழாவில் பேசியுள்ள நிர்மலா சீதாராமன், “அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு அதிக திட்டங்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்தாகவே பார்க்கமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.
“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்
“ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் தவறில்லை. திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே சுமுக உறவு இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.கடந்த 10ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பெரிய மாறுதல்கள் நம் நாட்டில் நடந்துள்ளது. முன்னேற்றம் அடைந்த நாடுகளை விட இந்தியா பல மடங்கு வளர்சியடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகும் வேகமாக வளரும் நாடு இந்தியா என சர்வதேச நிதி முகமை தெரிவிக்கிறது” என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அமைச்சர்களை மிரட்டும் ரவுடி ஜீயர் – விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.