Aran Sei

பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி வாரம்: மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்கள் என்னென்ன?

மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில், மாநிலங்களவையில் 7 புதிய மசோதாக்களை ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ளது. அதில் 3 மசோதாக்கள் மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்களான, திரிபுராவின் அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) மசோதா, 2022, டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (திருத்தம்) மசோதா, 2022 மற்றும் பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் பணி கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் (திருத்தம்) மசோதா, 2021 ஆகியவை இந்த வாரம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (திருத்தம்) மசோதா, 2022, குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022 மற்றும் இந்திய அண்டார்டிகா மசோதா, 2022 ஆகியவையும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களவைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – விவசாயிகள், எல்லைப் பிரச்சினை, பெகசிஸ் குறித்து பேச காங்கிரஸ் திட்டம்

மிகப்பெரிய அழிவுக்கான ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தடை திருத்தம்) மசோதா, 2022 உடன் சேர்த்து 7 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ளது.

மாநிலங்களவையில் மேற்கண்ட 7 மசோதாக்களை விவாதிக்க 17 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்