Aran Sei

‘தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிர்வாக குழு இயக்குநர் பணியிடங்களை நிரப்புக’ – ஒன்றிய அரசுக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள நிர்வாக குழு இயக்குநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ”தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும், வங்கிகளின் வாரியம் மற்றும் அதன் இயக்குநர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

11 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 175 இயக்குநர் பணியிடங்களில் 91 இடங்கள், அதாவது சுமார் 51 விழுக்காடு இடங்கள் காலியாக உள்ளதை அவரக்ள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1970 ஆம் ஆண்டில் இருந்து 44 ஆண்டுகளாக இந்தப் பணியிடங்கள் நிரப்பபட்டு வந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இந்த இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்