Aran Sei

‘போராடுவது என்பது மக்களின் அடிப்படை கடமை’ – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

போராடுவதற்கான உரிமை என்பது குடிமக்களின்  அடிப்படைக்கடமைகளில் ஒன்று என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தெரிவித்துள்ளது.

சட்டம் படித்த பட்டதரியான சிவா என்பவர்மீது  2௦17 – 19 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட  காலகட்டத்தில்  88 குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் காவல் சரிபார்ப்பில் கூறப்பட்டதை அடுத்து, தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சில்களில் அவர் வழக்கறிஞராக பதிவு செய்யஇயலவில்லை.

இந்நிலையில், இதற்கு எதிராக அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்  மனுதாக்கல் செய்திருந்தார்.

‘இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ – : காளை + விவசாயம் + அப்பாவி கிராமம் + ஊழல் அரசியல்வாதிகள் – ஆய்வே இல்லாத ஒரே பார்முலா!  

இதில் பெரும்பாலான வழக்குகள் கடந்த மே 22 2018 அன்று தூத்துக்குடியில் நடந்த வேதாந்தா தொழிற்சாலைக்கு எதிரானப் போராட்டத்தின்போது பதியப்பட்டதாகும். இந்தப் போராட்டத்தின்போது 13 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, அரசியலமைப்பு  பிரிவு 51-A (g) பகுதி IV-A [அடிப்படைக் கடமைகள்]ன் படி காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கை சூழலை மேம்படுத்துவது குறித்துக் காப்பதற்கான கடமையைக் கூறுகிறது என்றும், அரசியலமைப்பின் பிரிவு  21 ன் படி (வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் பாதுகாப்பு) சூழலுக்கான உரிமை மற்றும் நோய்களிருந்து பாதுகாப்பு என்பதை அரசியலமைப்பு உறுதிபடுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நின்று கிடைத்த நீதி – கண்ணகி – முருகேசன் வழக்கின் வரலாறும் தீர்ப்பும்

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ தாக்கல் குற்றப்பத்திரிக்கையில் அவர் மீது குற்றம்சாட்டப்படவில்லை என்றும்,  அரசியலமைப்பு  பிரிவு 48A ன் படி மாணவர்கள் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது அடிப்படைக் கடமையாக நிறைவேற்றியதாகும் என்றும் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

SOURCE:THE WIRE

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்