Aran Sei

‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்

ன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் இது ஒரு புதிய சுதந்திரப் போராட்டம் என்றும் மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

நேற்று (ஆக்ஸ்ட் 2), திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்றுள்ள நிகழ்ச்சியில் பேசிய நானா படோலே,  “நரேந்திர மோடி அரசு மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது. ஆனால், சுதந்திரப் போராட்டத்திற்கு அவர்கள் ஒருபோதும் பங்களிப்பே ஆற்றியதில்லை. சுதந்திரத்திற்கு முன், ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுதியதால் திலகர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே நிலைதான் இப்போதும் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

“ஊடக நிறுவனங்களை மோடி அரசு குறிவைக்கிறது. சுதந்திரம் பெற நாம் மீண்டும் போராட வேண்டும். அண்மையில், நான் ஒரு காஷ்மீர் இளைஞரைச் சந்தித்தேன். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றியாற்றியதாகவும் பிறகும் பணியிலிருந்து விலகியதாகவும் என்னிடம் கூறினார். அவர் ஒன்றிய அரசைக் குற்றம் சாட்டினார். தான் ஒரு இஸ்லாமியர் என்பதால், இப்படி விலகும் படியாக இருக்கிறது என அந்த இளைஞர் கூறினார்.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

ஒன்றிய அரசிற்கு எதிரான சுதந்திரத்திற்காக இந்த புதிய போராட்டத்திற்காக இந்நாட்டின் இளைஞர்கள் காங்கிரசில் இணையுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று நானா படோலே கோரியுள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்