Aran Sei

‘உரங்களின் விலையுயர்வு நோய்வாய்ப்பட்டிருக்கும் விவசாயத்தை மீளமுடியாத நெருக்கடிக்கு தள்ளும்’ – விவசாயிகள் வேதனை

விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இச்சூழலில், பல்வேறு உரங்கள் மற்றும் ரசாயனங்களின் விலை அதிகரித்து வருவது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைக் கவலையடைய செய்துள்ளது.

உரங்களின் விலை உயர்வானது, விவசாய உற்பத்தி செலவானியை அதிகரித்து, ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் விவசாயத் துறையை மீளமுடியாத நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்

“அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அடங்கிய உரத்தின் விலையானது ஒரு டன்னுக்கு ரூ.35,500 வரை இப்போது விற்பனை செய்யப்படுகிறது. மிக அண்மையில் வரை, டன்னுக்கு ரூ.24,000-க்கே விற்பனை செய்யப்பட்டது. டயமோனியம் பாஸ்பேட் மற்றும் பிற பாஸ்பரஸ் உரங்களின் விலைகளும் இதே போன்று உயர்ந்துள்ளன.” என்று கேரள கர்ஷகா விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜான்சன் குலதிங்கல் கூறியுள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடிகளில் ஒன்று, இவ்வகையான விலை ஏற்றயிறக்கங்களை சமாளிக்கும்படியாக அவர்களுக்குப் பொருளாதார ரீதியிலான நன்மையை அளிக்கும் மானிய திட்டங்கள் இல்லாது இருப்பது.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பஞ்சாயத்துகளில் மட்டும் சிறப்பு விவசாயத் திட்டங்களின் கீழ், சிறுபகுதி விவசாயிகள் மட்டுமே இப்போது உரங்களை மானிய விலையில் வாங்க அரசின் உதவியைப் பெற முடியும். இது போன்ற சிறப்புத் திட்டங்களில் இணைக்கப்படாத பெரும்பகுதி விவசாயிகள், இந்த உர விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்