Aran Sei

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தை அறிவித்த பயிற்சி மருத்துவர்கள்

யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி குறித்து கூறிய கருத்திற்கு இதுவரை அவர்மீது நடவடிக்கை எடுக்காததால், வரும் ஜூன் 1 ஆம் தேதியைக் கறுப்பு தினமாக கடைபிடித்து, நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக பயிற்சி மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கூட்டமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில், அலோபதி குறித்த ராம்தேவின் கருத்துகளுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தபிறகும், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்மேல் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: விவாதத்திற்கு வருமாறு சவால்விடுத்த இந்திய மருத்துவ சங்கம்

இதுதொடர்பாக, பயிற்சி மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,  “பாபா ராம்தேவ் தனது கருத்துக்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை வலியுறுத்தி, எங்கள் சுகாதார சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், வரும் ஜூன் 1 ஆம் தேதியை நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைப்பிடித்து, எங்கள் பணியிடத்தில் போராடவுள்ளோம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பாபா ராம்தேவ் நிபந்தனையற்று பொது மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம், 1897 -ன் கீழ் தொடர்புடைய பிரிவுகளில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ராம்தேவின் கருத்துகள் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்துகள் மீதான தயக்கத்தை அதிகரித்துள்ளது.” என்று தனது அறிக்கையில் பயிற்சி மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்