Aran Sei

அன்னை தெரேசாவின் நிறுவனத்திற்கு உரிமம் மறுக்கும் ஒன்றிய அரசு – உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு

குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் அமைப்பின் நிறுவனர் ஆனந்த் பால், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) உரிமத்தைப் புதுப்பிக்க ஒன்றிய அரசு மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் என்பது இந்தியா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள அனாதைகள் மற்றும் விதவைகளை மீட்கும் ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும்.

“மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி போன்ற புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA உரிமத்தை சில “பாதகமான தகவல்கள்” இருந்தது என்ற தெளிவற்ற காரணங்களுக்காக ரத்து செய்வது மற்ற அனைத்து அரசு சாரா நிறுவனங்களின் FCRA உரிமத்தைப் புதுப்பிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று ஆனந்த் பால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

“கிட்டத்தட்ட 6,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்” FCRA உரிமத்தைப் புதுப்பிக்கக் கூடாது என்ற ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறும் இந்த மனு உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்