Aran Sei

திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு – மத்திய அரசின் முடிவிற்கு பாலிவுட் நடிகர்கள் கண்டனம்

திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்த மத்திய அரசின் முடிவிற்கு பாலிவுட் நடிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தணிக்கைச் சான்றிதழ் அவசியம். தணிக்கைச் சான்றிதழை ஏற்க விருப்பம் இல்லாவிட்டாலோ அதில் மாற்றம் பெற நினைத்தாலோ படத்தின் தயாரிப்பாளர்கள் திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடலாம்.

1983-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தீர்ப்பாயம் கலைக்கப்படுவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இனி தணிக்கை வாரியத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என அமைச்சகம் கூறியுள்ளது.

மீண்டும் ஊரடங்கிற்கு தயாராகிறதா தமிழகம் – ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்

இதற்குப் பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், ஹன்ஸல் மேத்தா, நடிகை ரிச்சா சத்தா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ”இது யாரையும் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு. எவ்வளவு தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றத்தை நாடும் சக்தி இருக்கிறது? நீதிமன்றங்களுக்கு சினிமா தொடர்பான வழக்குகளை விசாரிக்க நேரமிருக்கிறதா? இது திரைத்துறைக்குச் சோகமான நாள். இப்படியொரு முடிவு எடுக்க என்ன அவசியம் இருக்கிறது?” என  ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

“மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவு தயாரிப்பாளர்களைப் பயமுறுத்தும். ஏனென்றால் அவர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணை எவ்வளவு நேரத்தை விழுங்கும் என்பதை நினைத்து பயப்படுவார்கள். துணிச்சலான விஷயங்களைப் பேச இயக்குநர்கள் தயங்குவார்கள். எனக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

Source : The Hindu Tamil

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்