Aran Sei

கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு- காவல்துறை விசாரணை

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம், அருகே தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் சார்பில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரியார் சிலைக்கு நேற்று(ஜனவரி 8) இரவில் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர்.
இதனை அறிந்த திமுகவினர் மற்றும் திராவிடர் கழகத்தினர் அங்குத் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து, காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இரவு ஊரடங்கின்போது, பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை சிலை அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தது வருகின்றது. இதற்குக் காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியார் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் இன்று(ஜனவரி 9) பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்