Aran Sei

‘நமது உரிமைகளைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம்’ – ஃபரூக் அப்துல்லா

ட்டப்பிரிவு 370, 35ஏ மற்றும் மாநில அந்தஸ்த்தைத் திரும்ப பெற தனது கட்சி தீர்மானம் நிறைவேற்றினாலும், பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற மக்கள் எழுச்சி பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்று தேசிய மாநாட்டு தலைவரும், ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நேற்று(டிசம்பர் 7), ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஃபரூக் அப்துல்லா, “நாம் எழுந்து நின்று, நமது உரிமைகளை (பிரிவு 370 மற்றும் 35A) திரும்ப பெற்றுத் தரும் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாங்கள் குடியரசையோ, பிரதமர் பதவியையோ, அரண்மனைகளையோ கோரவில்லை. எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப தர கோருகிறோம். இதில் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

நாகலாந்து துப்பாக்கிச் சூடு – மேஜர் ஜெனரல் அதிகாரத்தில் உள்ளவர் விசாரிக்க ராணுவ நீதிமன்றம் உத்தரவு

தங்கள் உரிமைகளுக்காக நிற்பதில் போதுமான உறுதியும், தைரியத்தையும் மக்கள் கொண்டுள்ளனர் என்றும் எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லாததால், எங்கள் உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கி டூரி(டெல்லியில் இருந்து தூரம்), தில் கி டூரியை(மனதில் இருந்து தூரம்) முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக ஜூன் 24 அன்று பிரதமர் மோடி கூறியதைக் குறிப்பிட்டுள்ள ஃபரூக் அப்துல்லா, “இந்த தில் கி டூரி மற்றும் டெல்லி கி டூரியை அகற்ற என்ன செய்யப்பட்டுள்ளது? களத்தில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக இன்னும் பல கொள்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

மசூதியை இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் ஒப்படைக்க வேண்டும் – ஒன்றிய இணை அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா

மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யப்பட்டது குறித்து பேசியுள்ள ஃபரூக் அப்துல்லா, “700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தியாகத்துக்குப் பிறகு, தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தில், ஒன்றிய அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்தது. தேர்தல் வெற்றிக்காக மட்டுமே ஒன்றிய அரசு செயல்படுகிறது. தேசத்தின் செழுமைக்காக அல்ல” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்