Aran Sei

‘காஷ்மீரில் மீட்டெடுத்ததாக கூறிய அமைதி எங்கே?’- பாஜகவிற்கு ஃபரூக் அப்துல்லா கேள்வி

ம்மு காஷ்மீரில் மீட்டெடுத்ததாக கூறிய அமைதியும் வளர்ச்சியும் எங்கே என்று பாஜகவிற்கு ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று(அக்டோபர் 20), ஜம்முவில் தேசிய மாநாட்டு கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ள ஃபரூக் அப்துல்லா, “அவர்கள் (பாஜக) 370-வது பிரிவை ரத்து செய்த பிறகு (ஆகஸ்ட் 2019-ல்) ஜம்மு காஷ்மீரில் அமைதியை மீட்டெடுத்துவிட்டதாக கூறினார்கள். அவர்கள் வாக்குறுதியளித்த அமைதியும் வளர்ச்சியும் எங்கே? மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்” என்று கோரியுள்ளார்.

இந்த மாதம் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள், ஒரு மருந்தக உரிமையாளர் மற்றும் ஐந்து தொழிலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்னைகுறித்து மீண்டும் பேசிய துருக்கி அதிபர் – கண்டனம் தெரிவித்த ஒன்றிய அரசு

2019 ஆகஸ்ட் 5 அன்று அளிக்கப்பட்ட வளர்ச்சி குறித்த வாக்குறுதிகள் சமீபத்திய கொலைகளால் உடைத்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் ராம ராஜ்ஜியம் குறித்து பேசுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு அது குறித்து ஏதும் தெரியாது என்பதுதான் உண்மை. ராம ராஜ்ஜியத்தில் பாகுபாடு இல்லாமல், இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்” என்று ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வார்த்தைகளான, “நீங்கள் நண்பர்களை மாற்றலாம். ஆனால், அண்டை நாடுகளை மாற்ற முடியாது” என்பதை குறிப்பிட்டுள்ள ஃபரூக் அப்துல்லா, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்பு ஜம்மு காஷ்மீரில் அமைதிக்கு முக்கியமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேசிய மாநாட்டு கட்சியானது பாகிஸ்தானுக்கு ஆதரவான கட்சியாக என்றும் இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்