நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நிற்க வேண்டும் என்றும் மக்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது வீடுகளில் முடங்கிக் கிடக்காமல் களத்தில் இறங்க வேண்டும் என்றும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று (மார்ச் 23), ஜம்முவில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சியின் (ஜேகேஎன்பிபி) விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அவர், காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
“எனது கட்சியும் ஜேகேஎன்பிபி கட்சியும் இந்தியாவின் பிற பகுதிகளில் இல்லை. ஆனால், காங்கிரஸ் எல்லா இடங்களிலும் உள்ளது. அவர்கள் நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு எதிராக நிற்க வேண்டும். வீடுகளில் முடிங்கி கிடப்பதற்கு பதிலாக அச்சுறுத்தல்களுக்கு எதிராக களம் காண வேண்டும். நம் மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். ” என்று ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது குறித்து பேசுகையில், “இது காஷ்மீர் மக்களின் மரியாதைக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல். விரைவில், நாம் நம்முடைய நிலத்தை இழப்போம். வெளியில் இருந்து மக்கள் வருவதால், நம் பிள்ளைகள் வேலையை இழப்பார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.