Aran Sei

தொடரும் போராட்டம் – விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கும் திமுக

மத்திய அரசு கொண்டுவந்த விவசாய திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் டிசம்பர் 18 ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்திருக்கின்றன.

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘தில்லி சலோ’ (தில்லி போவோம்) எனும் பேராட்டத்திற்கு விவசாயச் சங்கங்கள் அழைப்புவிடுக்கப்பட்டு, இப்போது தில்லி எல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

’தில்லி சலோ’ : தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்

அவர்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள் , ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கிறன. போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. விவசாயிகள் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயச் சங்கங்கள் தெரிவித்தன.

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

விவசாயிகளின் போராட்டத்திற்குப் பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாவட்ட விளையாட்டு வீரர்கள், அரசு அளித்த விருதுகளைத் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர். பஞ்சாப் கவிஞர் சுர்ஜித் பார்டெர் தன்னுடைய பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

“விவசாயிகள் மீதான தாக்குதல் பாஜகவின் வன்முறை வெறியாட்டம்” – தொல்.திருமாவளவன்

இவர்களைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களும் தங்களுடைய பதக்கங்களைத் திருப்பி அளிக்க முடிவு செய்து குடிஅரசுத் தலைவரைச் சந்திக்க இருக்கின்றனர். இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், விவசாயப் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அம்பானி-அதானி நிறுவனங்களைப் புறக்கணிக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 8 ஆம் தேதி நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

’எங்களுக்குள் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி’ – பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயச் சங்கம்

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, டிசம்பர் 18 ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்திருக்கின்றன. திமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் , விடுதலைச் சிறுத்தைக் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்